Tamil kadhal kavithaigal | தமிழ் காதல் கவிதைகள் | காதலில் களிக்கும் நண்பர்களுக்கு என் காதல் கவிதைகள் | மேலும் கவிதைகளுக்கு இணைய பக்கத்தின் உள் சென்று பார்க்கவும்.......

காதலின் ஆழத்தை உணர்த்தும் காதல் கவிதைகள்:




கண்ணீரின் வலி:

உடலில் இருந்து வழியும் செண்ணீரை விட,
விழியில் இருந்தது வழியும் கண்ணீருக்கு வலி அதிகம் என உணருகிறேன், உன் விழியில் வழியும் கண்ணீரை கானும்பொழுது....!!!

--------------------

விழி வழி காதல்
உன் உதட்டின் வார்த்தை கேட்க தவித்தவன்,
இன்று உன் விழியின் வார்த்தை அறிந்து திகைத்தேன்.....!!!

--------------------

விரல் விழி கோர்வை
விரல் கோர்க்கும் தூரத்தில் நீ இருந்தும்,
விழி மட்டும் கோர்த்து நிற்பது ஏணோ??
 --------------------

காதல் மொழி
விழி பார்க்காமல் போனாலும் இதயங்கள் பார்க்கும்,
இதழ் பேசாமல் போனாலும் இதயங்கள் பேசும் மொழி தான் காதல்.....!!!

--------------------

காதலின் நிறம்
அவளின் நிறம் பார்க்க தோணவில்லை,
அவள் மனம் பார்த்ததால்....!!!!
காதலுக்கு நிறம் உண்டோ..!!!

 --------------------

காதலின் சொர்கம் நரகம்
இறந்தபின் சொர்கமா நரகமா எனும் கவலை இல்லை எனக்கு,
வாழும் காலத்தில் கண்டுவிட்டே,
அவள் பார்வை படும் நேரம் சொர்கமும்,
அவள் பார்வைக்கு ஏங்கும்போது நரகமும்...!!!

                                 -----------------



எழுத்தாளர் : அரவிந்த்

மேலும் இது போன்ற காதலின் ஆழ்த்தை உணர்த்தும் காதல் கவிதைகளுக்கு நமது master mind page follow pannunga

Post a Comment

0 Comments