Ponniyin Selvan Tamil Story | பாகம் 1 | அத்தியாயம்-2 : ஆழ்வார்க்கடியான் நம்பி | மாஸ்டர் மைண்ட்

பொன்னியின் செல்வன்


பாகம் 1 - புது வெல்லம்

வணக்கம் நண்பர்களே நமது முந்தைய பதிவான பொன்னியின் செல்வன்
முன்னுரை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:
https://mastermindtamil.blogspot.com/2020/04/ponniyin-selvan-tamil-story.html?m=1

அத்தியாயம் 1 ஆடித்திருநாள் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:


அத்தியாயம்-2
ஆழ்வார்க்கடியான் நம்பி

வீரநாராயண ஏரியின் அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து கடம்பூர் மாளிகையை நோக்கி தென்திசையில் விரைந்தான் வந்தியத்தேவன். தென்திசையை நோக்கி செல்ல ஆரம்பித்ததும் அவன் மனதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட தொடங்கியது. அது வாழ்வில் வேறு யாரும் காண கிடைக்காத அதிசயங்களை தான் காணும் நேரம் வந்துவிட்டதாக அவன் உணர்ந்தான், கொள்ளிடம் ஆற்றின் கரையை கடந்ததும் அச் சோழநாட்டின் நீர்வளம், நிலவளம், அங்கு வாழும் மக்கள் எவ்வளவு அழகுடனும் செழிப்புடனும் இருப்பார்கள்!  காவியங்களில் கூறிய பொன்னி நதியின் காட்சி எவ்வளவு ரம்மியமாக இருக்கும்! அந்த நதிக்கரைகளில் சிவ பக்தர்களான சோழர்கள் கட்டியுள்ள கோயில்களின் வேலைப்பாடுகள் எவ்வளவு அழகாக இருக்கும் என்பனவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டு முன்னேறினான்.

மேலும் பூம்புகார், உறையூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பழையாறை நகர், சோழ மன்னர்களின் தலைநகர்!  எவ்வளவு ரம்மியமாக இருக்கும் அங்குள்ள மாடமாளிகைகள், கோயில் கோபுரங்கள், வீதிகள் எவ்வளவு அழகாக இருக்கும். அங்குள்ள கோயில்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரம், திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாட கேட்போர் பரவசம் அடைவார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் அதை கேட்கும் பாக்கியம் கிடைக்கப்போகிறது. மேலும் மாமன்னர் வீரத்தமிழன் சுந்தர சோழரை காணப்போகிறேன், அவரது புதல்வி குந்தவைப் பிராட்டியையும் காணப்போகிறேன் என்பனவற்றையெல்லாம் என்னும் பொழுது மனம் ஆனந்த கூத்தாடுகிறது.

ஆனால் வழியில் தடை எதுவும் நேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது என்று இளவரசர் ஆதித்யா கரிகாலன் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அவர் விடுத்த கட்டளையை நிறைவேற்றும் வரை எக்காரணம் கொண்டும் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாள் பிரயாணம் மட்டுமே மிச்சம் உள்ளது எனவே பொறுமையாக இருப்போம். ஆதவன் மறைவதற்குள் கடம்பூர் மாளிகையை அடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வீரநாராயணபுர விண்ணகர கோயிலை நெருங்கினான் வந்தியத்தேவன். 

அன்று ஆடித்திருநாள் என்பதால் கோயிலை சுற்றியுள்ள மரத் தோப்பு முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கோயிலை அடைய செல்லும் வழிநெடுகிலும் பலவகை பழக்கடைகள், நறுமணம் வீசும் பலவகை பூக்கடைகள், மேலும் தேங்காய், இளநீர், பொறி, வெல்லம், வெற்றிலை போன்றவை விற்கும் பல கடைகள் இருந்தன. குழந்தைகளை கவரும் வண்ணம் பல வேடிக்கை வினோதங்கள் நிகழ்ந்தன. ஜோசியர்கள், கைரேகை நிபுணர்கள், குறி கூறுபவர்கள், விஷக்கடிக்கு மருந்து கொடுப்பவர்கள் என பலர் அங்கு நிறைந்திருந்தன அவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தவாறே முன்னேறிச் சென்றான் வந்தியதேவன்.

அப்பொழுது தூரத்தில் சிலர் கூட்டமாக நிற்பதை கண்டான் கூட்டத்திலிருந்து பெரும் சலசலக்கும் ஏற்பட்டது எனவே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் அவன் குதிரையை விட்டு கீழே இறங்கி தன் குதிரையை அங்குள்ள மரத்தில் கட்டிவைத்துவிட்டு கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றான். கூட்டத்தில் மூவர் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அம்மூவரில் ஒருவர் உடம்பில் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு தலையில் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி, அவர் தன் கையில் சிறு கைத்தடியும் வைத்திருந்தார். விவாதத்தில் ஈடுபட்ட மற்றொருவர் உடல் முழுவதும் திருநீர் பட்டை பூசியிருந்த சிவபக்தர் ஆவார்.

விவாதத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் காவி உடை அணிந்திருந்தார், அவரை பார்க்கும் பொழுதே தெரிந்தது அவர் வைஷ்ணவம், சைவம் இரண்டும் இல்லை இரண்டையும் கடந்த அத்வைத வேதாந்தி என. சிவபக்தரான சைவர் கூறினார், சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியை காண திருமாலும் முயன்றார்கள், ஆனால் பார்க்க முடிந்ததா எனவே சிவன் தான் எல்லோருக்கும் முதலாய பெரிய தெய்வம் என்று கூறினார்.

இதனைக் கேட்ட விஷ்ணு பக்தரான ஆழ்வார்க்கடியான் தன் கையில் வைத்திருந்த கைத்தடியை ஆட்டியவாறு இலங்கையை ஆண்ட தசரதர் ராவணனுக்கு சிவன் வரம் தந்தார், அந்த வாரம் அனைத்தும் திருமாலின் ராம அவதாரத்துக்கு முன் தவிடுபிடி ஆனது அல்லவா! அப்படியிருக்க சிவன் எப்படி பெரிய தெய்வம் ஆவார் எம் திருமாலே பெரிய தெய்வம் ஆவார் என கூறினார். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த காவியுடை அணிந்த சன்னியாசி தலையிட்டு, நீங்கள் ஏன் சிவனா விஷ்ணுவா என்று சண்டையிட்டுக் கொள்கிறீர்கள் இதற்கான பதில் வேதாந்தம் சொல்கிறது, நீங்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளீர்கள் எனவே சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா எனும் கேள்வி உங்களுக்குள் எழுந்துள்ளது, இதுவே ஞான மார்க்கத்தில் இருந்து பார்த்தால் உங்களுக்கு சிவனும் இல்லை விஷ்ணுவும் இல்லை சர்வம் பிரம்மமயம் என்பது விளங்கும் என்று கூறினார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு சரி நிறுத்தும் உபதேசத்தை, உம் சங்கராச்சாரியார் அவ்வளவும் எழுதிவிட்டு என்ன சொன்னார் என்பது தெரியுமா பஜகோவிந்தம் பஜகோவிந்தம் என மூன்று முறை கூறிவிட்டு பஜகோவிந்தம் மூடமதே என சொன்னார் உம்மை போன்ற மூடர்களுக்கு தான் அவர் அதை கூறினார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அவர்களுக்கு உகந்த வாதகரின் கட்சியை ஆதரித்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அதனாலேயே அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.


இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சன்யாசி, அடேய்! முன்குடுமி நம்பி! நான் மூடன் என்று நீ சொன்னது சரிதான். ஏனென்றால், உன் கையில் வெறும் தடியோடு பேச வந்திருக்கும் நீ வெறும் தடியன் ஆகிறாய். உன்னைப்போன்ற வெறும் தடியணிடம் விவாதம் செய்யும் நான் நீ சொல்வது போல ஒரு மூடன் தான் என்று கூறினார். "ஓய் !சுவாமிகளே என் கையில் வைத்திருப்பது வெறும் தடியல்ல, வேண்டிய சமயத்தில் உன் மொட்டை மண்டையை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த தடி" என கூறிக்கொண்டு தடியை உயர்த்தினார். அப்பொழுது அங்கு கூடியிருந்தவர்கள் நம்பியை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு, நம்பியின் கையில் உள்ள தடியை பிடிங்கி அவர்களை நன்கு நாலு சாத்து சாத்தும் என்று தோன்றியது. ஆனால் அந்த சன்னியாசி சுவாமிகளோ அங்கிருந்த கூட்டத்தினுள் எங்கேயோ மறைந்து சென்றுவிட்டார். இதனை பார்த்துக்கொண்டிருந்தேன் வைஷ்ணவ கோஷ்டிகள் மேலும் ஆர்ப்பரிக்க தொடங்கினர். அப்பொழுது இந்த மூட சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் எண்ணினான், கூட்டத்தின் முன் வந்து எதுக்கு சண்டை இடுகிறீர்கள் வேறு வேலை இல்லையா! சண்டைக்கு தினவெடுத்தால் ஈழ நாட்டுக்கு போங்கள் அங்கு போர் நடக்கிறது என்று கூறினார்.

இதனைக் கேட்ட ஆழ்வார்க்கடியான் நம்பி "யாரடா நீ நியாயம் கூற வந்தது" என கனத்த குரலில் கூறினார். வந்தியத்தேவனின் தோற்றமும் முகபாவனையும் அக்கூட்டத்தில் சிலருக்கு பிடித்துப்போக தம்பி நீ சொல்லுப்பா இவருக்கு எடுத்து சொல் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என சில மக்கள் இவன் பக்கம் பேசினர். வந்தியத்தேவன் எனக்கு தெரிந்த சில நியாயம் சொல்கிறேன், சிவன் விஷ்ணு இருவரும் தங்களுக்குள் சண்டை போடுவதில்லை அவர்களுக்குள் சினேகம் அதிகமாகவே இருக்கிறது அப்படி இருக்க நீங்கள் ஏன் சண்டை போடவேண்டும் என்று கூறினான். இதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான் நம்பி மற்றும் கூட்டத்தினர் சிலர் அவனை பார்த்து நகைத்தனர்.

அப்பொழுது சிவபக்தரான சைவர் குறுக்கிட்டு, உன் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது வேடிக்கை பேச்சால் விவாதம் தீருமா. சிவன் விஷ்ணுவை விட பெரிய தெய்வமா இல்லையா என்பதற்கு விடை கூறு என கூறினார். அதற்கு வந்தியத்தேவன் சிவன் விஷ்ணு இருவருமே சமம்தான் இருவரில் யாரை வேண்டுமானாலும் கும்பிடுங்கள் எதற்காக சண்டை என்றான்.

"அது எப்படி! சிவனும் திருமாலும் ஒன்று என கூறுகிறாய் அதற்கு ஆதாரம் என்ன?" என அதட்டிக் கேட்டார். ஆதாரமா! ஆதாரம் தானே சொல்கிறேன் நேற்று வைகுண்டம் போயிருந்தேன் அங்கு சிவனும் வந்திருந்தார், இருவரும் ஒன்றாக ஒரே ஆசனத்தில் அமர்ந்து இருந்தன இருவரின் உயரமும் ஒன்றாகவே இருந்தது எதற்கும் அளந்து பார்த்து விடுவோம் என்று என் கைகளால் முழம் போட்டு பார்த்தேன் அப்பொழுது இருவரின் உயரமும் ஒன்றாகவே இருந்தது.

இருந்தும், சந்தேகம் தீரவில்லை எனவே சிவனையும் விஷ்ணுவையும் பார்த்து உங்கள் இருவரின் யார் பெரிய தெய்வம் என்று நேரடியாக கேட்டேன். அதற்கு அவர்கள் "ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு" என்று கூறி என் கையில் ஒரு பிடி மண்ணை கொடுத்தார்கள் என்று கூறிவிட்டு, தன் இடதுகையை நீட்டி காட்டினான். அவன் கையில் ஒரு பிடி மண் இருந்தது, அந்த மண்ணை நம்பியின் மீது வீசி எறிந்தான். இதனை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினரும் சிலர் தன்கையில் ஒரு பிடி மண்ணை எடுத்து வீசினர், சிலர் அச்செயலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். கோபமடைந்த நம்பி தன் கையிலிருந்த கைத்தடியை எடுத்து சுழற்றி வந்தார். பெரிய கலவரம் சண்டை வருவதுபோல் இருந்தது, நல்ல வேலை அப்போது தூரத்தில் ஒரு சலசலப்பு.

"சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாற பாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அடுத்த வெற்றிவேல் உடையார், 24 போர்களின் சண்டையிட்டு 64 வீர காயங்களை தன் மேனியில் ஆபரணங்களாக கொண்டிருக்கும், சோழநாட்டு தானதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவதிக்கும் தேவர், பெரிய பறவை பெயர் பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழிவிடுங்கள் என்று இடிமுழக்க குறளில் சத்தம் கேட்டது. அப்படையில் முரசு கொட்டு ஓர் வந்தனர், அதன்பின் பனைமரக் கொடியேந்தி வந்தனர், அதன்பின் வேலேந்தி சில பேர் வந்தனர், அதற்குப்பின் அலங்கரித்த யானையின் மேல் வீர திருமேனியுடன் ராஜா பெயர் பழுவேட்டரையர் வீற்றிருந்தார்.

அக்காட்சியை வந்தியதேவன் மக்களோடு மக்களாக ஓரமாக நின்று பார்த்தான். ராஜா வரும் யானைக்குப் பின்னால் பட்டு திரையில் மூடப்பட்ட பல்லக்கு ஒன்று வந்தது. அதில் யார் வருவது ஊற்று நோக்கியவாறு நின்றான் வந்தியத்தேவன், அப்பொழுது பல்லக்கிலிருந்து செக்கச்சிவந்த நிறம், வளையல்கள் அணிந்த கை ஒன்று பல்லக்கின் திரையை விளக்கியது, பெண்ணின் முகம் தென்பட்டது. நிலவின் ஒளியைப் போன்ற நிறமும் நிலவின் வடிவம் போன்ற அழகிய முகமும் அப்பெண் கொண்டிருந்தாலும், வந்தியத்தேவனுக்கு ஏனோ அப்பெண்ணை பார்த்ததும் அழகும் ஆனந்தமும் ஏற்படவில்லை மாறாக அப்பெண்ணின் முகம் பார்த்ததும் பயமும், அருவருப்பும் தோன்றியது.

அப்பெண் பல்லக்கில் இருந்தவாரே கூட்டத்தை நோக்கி கையசைத்து வந்தியத்தேவன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள். அவள் வன்னிய தேவனின் அருகில் சற்று உற்று நோக்கினால். உற்று நோக்கியதும் சட்டென்று அவளது கைகள் பள்ளக்கின் திரையை மூடி முகம் மறைத்துகொண்டால். தன் அருகில் எதையோ பார்த்து தான் அவள் திரை மூடினாள் என்பதை உணர்ந்து வந்தியத்தேவன் பின்னல் திரும்பி என்னவென்று பார்த்தான். அங்கு முகம் சிவந்து கண்களில் கோபத்தீயுடன் ஆழ்வார்க்கடியான் மரத்தில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். ஆழ்வார்க்கடியான் முகம் சொல்லமுடியாத அளவுக்கு விகாரம் அடைந்து கோர வடிவமாக மாரி பார்த்தார். இதனைக் கண்ட வந்தியத்தேவன் ஒன்றும் புறியாதவாரு திகைப்புடனும், அருவெருப்புடனும் பார்த்தபடி நின்றான்.


நமது அடுத்த பதிவான பொன்னியின் செல்வன் கதையின் பாகம் 1, அத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில் பற்றி படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இதயத்தில் செல்லவும்.
https://mastermindtamil.blogspot.com/2020/04/ponniyin-selvan-tamil-story-1-3-master.html?m=1

Post a Comment

0 Comments