சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு Corona Virus பாதிப்பு
Corona Virus பாதிப்பு காரணமாக தமிழக அரசு மே 3ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில். தற்போது அந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் Corona Virus ஆல் ஒருநாலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே இருந்துவந்தது. இதனால்அடுத்த சில நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக குறையும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் கரோனா வைரஸ் ஆல் தமிழகத்தின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 என கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பறவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சென்னையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்திருந்த இந்த வேளையில் சென்னையில் 103 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கரோனா வைரஸ் இதுவரை சமூக பரவல் இல்லை என்று தெம்புடன் இருந்த நிலையில். தற்போது ஒரே நாளில் 103 பேர் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களுக்கு Corona பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாததால் ஒருவேளை சமூக பரவல் ஆரம்பித்து விட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுபெறும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பலருக்கு இச்செய்தி மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் 103 பேர் பாதிக்கப்பட்டதுடன் சேர்த்து தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 121 பேர் Corona Virus ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை காரோன வைரஸுக்கு 2058 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சென்னை அதிக பாதிப்புகளை கொண்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் Corona வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.
0 Comments