தமிழகத்தில் 144 தடை ஊரடங்கு உத்தரவு வருகிற ஏப்ரல் April 30 ஆம் தேதி வரை நீட்டிட்டு தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

தமிழகத்தின் 144 தடை உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது:


கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த 144 தடை ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Corona Virus நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில். இந்தியாவில் பரவுவதை தடுக்கும் விதமாக இந்திய அரசு கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும் Corona Virus பாதிப்பின் தீவிரம் அதிகமடைந்ததை அடுதது அந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்று தமிழக அரசு 144 தடை ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. Corona Virus பாதிப்பு தமிழகத்தில் அதிகம் பரவி வருவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 144 தடை உத்தரவு காலத்தில் கடைகள் வணிகங்கள் அனைத்தும் இதற்கு முன்பு இயங்கிவந்ததை போலவே காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் பேக்கரிகள் இனி தினசரி அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் இயங்கும் எனவும் உத்தரவு வெளியாகியுள்ளது.

நியாயவிலை கடைகளில் மே மாதத்திற்கு தேவையான பொருட்கள் சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் முதலியன பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்றமாதம் அளித்ததை போலவே சார்பு சாரா தொழிலாளிகள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் பணம் கொடுக்கப்படும் எனவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments