மயிலாடுதுறையில் 7 பேருக்கு Corona Virus தோற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பேருக்கு Corona:


உலகம் முழுவதும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் Corona Virus தற்போது இந்தியாவிலும் மிகக்கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தமிழகமும் மிகப்பெரிய அளவில் Corona பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில். இதுவரை தமிழகத்தில் 1204 பேர் Corona virus பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு மே 3ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பை அறிவித்திருந்தது.மேலும் வரும் 20ஆம் தேதி வரை ஊரடங்கு மிகக்கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அந்த நிலையில் தற்போது வரை Corona Virus பாதிக்கப்படாதவர்கள் Zero Corona Virus மாவட்டமாக இருந்துவந்த மயிலாடுதுறை மாவட்டத்திலும் Corona Virus பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதை தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது புதிதாக 7 பேருக்கு Corona Virus இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் இடங்களையும் Corona Virus பாதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மருத்துவமனையில்  7 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்றவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 12 பேர் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 4 பேருக்கு தொற்று இல்லை என்பதால் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 8 பேரில் 7 பேருக்கு கொராணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் 7 பேரையும் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.


Post a Comment

0 Comments