தமிழ்நாட்டில் Corona Virus பாதிப்பு இல்லாத இரண்டு மாவட்டங்கள் | Tamilnadu coronavirus update | Mastermind

தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை




Corona Virus பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத இரண்டு மாவட்டங்களை பற்றிய அறிவிப்பு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் 103 பேர், தமிழகத்தில் மொத்தம் 121 பேர் Corona Virus ஆல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Corona Virus Free மாவட்டங்களாக இரண்டு மாவட்டங்கள் உள்ளன.

இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவர்கூட Corona Virus ஆல் பாதிக்கப்படாமல் Corona Free மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் திகழ்ந்து வந்தது.

தற்போது அந்தப் பட்டியலில் ஈரோடு மாவட்டமும் சேர்ந்துள்ளது. 70 பேர் Corona Virus ஆல் பாதிக்கப்பட்டிருந்த ஈரோடு மாவட்டத்தில் தற்போது ஒருவர்கூட Corona Virus பாதிப்புடன் இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் Corona Virus தோற்றால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் மரணமடைந்தார் மீதமுள்ள 69 பேரும் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது Corona Virus பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது.


  • Corona Virus பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தநிலையில் தற்போது வந்துள்ள இந்த செய்தி பலரின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு தனித்திருந்தாள் இந்த கொடிய நோயிலிருந்து விரைவில் விடுதலை அடையலாம் என்று பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments