பொன்னியின் செல்வன் கதை முன்னுரை:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் காணவிருக்கும் இணையப்பதிவு, காலத்தினால் அழிக்க முடியாத பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் கம்பீரத்துடன் எழுந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய பெருமைக்கு உரியவர்.
நம் தமிழ் மரபில் அழிக்க முடியாத உன்னத மன்னர் பல கலைகளிலும் போர்முறைகளில் சிறந்து விளங்கிய வீரர் ராஜா ராஜா சோழனின் பெருமைகளையும், தமிழ் மக்கள் வாழ்வியலை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்த மகா காவியம், கவிஞா் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை பற்றிய முன்னுரையை கானவிருக்கிரோம்.
பொன்னியின் செல்வன்:
இக்கதை நிகழ்ந்த ஆண்டு 20 ஆம் நூற்றாண்டு, எழுதியவர் கல்கி (எ) ரா. கிருஷ்ணமூர்த்தி.
பொன்னியின் செல்வன் கதை மொத்தம் 5 பாகங்களும் 293 அத்தியாயங்களும் கொண்ட மிகப் பெரிய நூல்.
20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், கலை, அறிவியல் போன்றவற்றையும் அம்மக்களை ஆண்ட மன்னர் ராஜா ராஜா சோழனை பற்றியும் நமக்கு எடுத்துரைக்கும் நூல் இந்த பொன்னியின் செல்வன்.
தமிழ் சினிமாவிலும் இக்கதையை ஒளிச்சித்திரமாக காண்பிக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் இக்கதையின் முழு பிரம்மாண்டத்தை காண்பிக்க முடியாது என்கிற காரணத்தாலேயே அதை கைவிட்டனர்.
இக்கதை தென் தமிழகத்தில் உள்ள தஞ்சை மண்ணில் நடந்திருந்தாலும், இக்கதையின் பயணம் தஞ்சை, நாகை, காஞ்சி மற்றும் இலங்கை வரை தொட்டு வந்துள்ளது. இக்கதையில் வரும் பல கதாபாத்திரங்கள், கதையை கடத்தி செல்லும் சாதாரண பாத்திரங்களாக மட்டும் இல்லாமல் உங்கள் வாழ்வையே புரட்டி பொடும் பாத்திரங்களாக அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இக்கதை இன்றளவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜா ராஜா சோழன்:
கி.பி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தரசோழன் மாதவிக்கும் இரண்டாம் ஆன் மகனாக பிறந்தவர் ராஜ ராஜ சோழன். இவருக்கு ஆதித்ய கரிகாலன் எனும் சகோதரன் மற்றும் குந்தவை பிராட்டியார் எனும் சகோதரியும் இருந்தனர்.
மன்னர் சுந்தரசோழன் மறைவிற்கு பிறகு உத்தம சோழனின் 15 ஆண்டுகள் ஆட்சிக்கு பின்னரே ஜனநாயக முறைப்படி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் எனும் இயர் பெயருடன் விலங்கிய அவர் ராஜா ராஜா சோழன் என அழைக்கப்பட்டார்.
ராஜா ராஜா சோழன் ஆட்சி செய்த காலங்களில் மக்கள் செல்வ செழிப்புடன் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் அதனால் அவரது ஆட்சி காலம் ஒரு பொற்காலமாக விளங்கியது. ராஜா ராஜா சோழன் அறிவிலும் ஆட்சி முறைகளில் மட்டும் சிறந்து விளங்கவில்லை போர்க்களைகளிலும் சிறந்து விளங்கினார். இவரது ஆட்சி காலங்களில் முதல் முதலாக யானைகளை போர்முரைகளில் பயன் படுத்தினார். இவரது வீரத்திற்கு சான்றாக தெற்கே ஈழம் முதல் வடக்கே கலிங்கம் வரை வெற்றி கொடி நாட்டினார். வலிமையான போர் படைகளை கொண்டிருந்த ராஜா ராஜா சோழன் மிக தீவிர சிவபக்தன் ஆவார். அதனால் இவர் போர் புரிந்து வெற்றிகள் ஈட்டிய இடம் எல்லாம் சிவாலயம் கட்டி வந்துள்ளார். இவரது சிவ பக்திக்கு சான்றகவே 1000 ஆண்டுகள் கடந்து இன்றளவும் பலர் பிரம்மிக்கும் வகையில் தஞ்சை பெருவுடையார் கோவில் அமைந்துள்ளது.
கல்கி (எ) ரா. கிருஷ்ணமூர்த்தி
கல்கி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899 இல் பிறந்தார் தனது பள்ளி படிப்பை அங்கு உள்ள தின்னை பள்ளிக்கூடத்தில் படித்த இவர் கல்லூரி படிப்பை திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் படித்தார்.
மகாத்மா காந்தி அவர்களின் சுதந்தர போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அவர் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று ஒரு வருட சிறை தண்டனையும் அனுபவித்தார்.
சிறை தண்டனை காலம் முடிவடைந்த பிறகு சென்னை திரும்பிய கல்கி, திரு.வி.கா அவர்களின் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணிபுரிந்து தேசபக்தன், நவசக்தி போன்ற பல நாவல்கள் எழுதினார். அதன் பின் ஆனந்த விகடனிலும் மற்றும் சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடல்களில் காற்றிலே வந்த கீதம் மற்றும் அந்தனாலும் வந்திடாதோ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
அதன் பின்னர் அவர் தனது சுய பத்திரிக்கை ஒன்றை துவங்கினார் அதற்கு கல்கி என்றும் பெயர் வைத்தார். இந்த பத்திரிக்கையின் பெயராலேயே இன்றளவும் இவரை பலர் கல்கி என்று அழைக்கின்றனர். கல்கி பத்திரிக்கையில் இவர் எழுதிய கதைகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றன. கல்கி பத்திரிக்கையில் இவர் எழுதிய சிவகாமியின் சபதம், தியக பூமி, அலையோசை, கள்வனின் காதலி, பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் போன்ற கதைகள் இன்றளவும் உலகம் முழுவதும் பலரின் விருப்பக் கதைகளாக உள்ளன.
பொன்னியின் செல்வன் பாகம் - 1
அத்தியாயம் 1 - ஆடித்திருநாள் படிக்க:
அத்தியாயம் 1 - ஆடித்திருநாள் படிக்க:
2 Comments
Super
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி 🙏🤝
Delete