போதையில் பாம்பை கடித்து துப்பிய போதை ஆசாமி
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 40 நாட்களாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கர்நாடக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மதுக்கடைகள் திறந்ததும் பலர் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மதுபாட்டில்களை மொத்தமாக பெட்டி பெட்டியா வீடுகளுக்கு வாங்கி சென்றுள்ளனர்.
அப்படி மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கி வீட்டில் சேர்த்து வைத்து குடித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் எனும் வாலிபர் நேற்று ஃபுல் போதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு பாம்பு அவரை கடந்து சென்றுள்ளது.
அந்தப் பாம்பை பார்த்த அந்த போதை ஆசாமி உடனடியாக அந்த பாம்பை பிடித்து அதை தனது பற்களால் கடித்து துப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அந்தப் பாம்பு விஷத்தன்மையற்ற பாம்பாக இருந்ததால் அந்த வாலிபருக்கு எதுவும் விபரீதம் ஏற்படவில்லை.
இத்தகைய பரபரப்பான காட்சியை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கைப்பேசியில் படம்பிடித்து இணையதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அரசு மதுக்கடைகளை திறந்த இரண்டாம் நாளிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததை பார்த்து பலரும் இந்த மதுக்கடைகள் திறந்தது அவசியமா என அரசை பார்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
பாம்பை கடித்து தின்ற போதை ஆசாமியின் காட்சி:
0 Comments