Ponniyin Selvan story in Tamil | பாகம் 1 - புதுவெள்ளம் | அத்தியாயம் 1 - ஆடித்திருநாள் | Master Mind

பொன்னியின் செல்வன்
முதலாம் பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 1 - ஆடித்திருநாள்

நமது முந்தைய பதிவான பொன்னியின் செல்வன் முன்னுரை பற்றி படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்.


பொன்னியின் செல்வன் இக்கதை நிகழ்ந்த ஆண்டு கி.பி 983
தொண்டை நாட்டிற்க்கும் சோழ நாட்டிற்க்கும் இடையில் திருமுனைப்பாடி எனும் ஒரு நாடு உள்ளது. அந்நாட்டின் தென் திசையில் தில்லை நடராஜருக்கு மேற்கே கடல்கள் பொறாமை படும் அளவிற்கு அழகுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் ஏறி வீரநாராயண ஏரி, இக்காலத்தில் விறனத்து ஏறி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

அன்று மாலை சூரியன் மறைய காத்திருக்கும் ரம்மியமான நேரம் அந்த ஏரி கரையோரம் ஒரு வாலிப வீரன்  குதிரையில் வந்தான். அவன் நம் தமிழ் வீர சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன். நெடுந்தூரம் பயணம் செய்து வருவதால் அவனது குதிரை மிகவும் களைப்புடன் மெல்ல மெல்ல மெதுவாக முன்னேறிச் சென்றது.

அன்று ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் சோழ நாட்டு நதிகளின் வெள்ளம் இருகரையும் தொட்டு தழுவி ஓடிக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும்  விதை நிலங்கள்  எல்லாம் செல்வ செழிப்புடன் இருந்தது. இத்தகைய ரம்மியமான காட்சிகளில் தன் மெய்மறந்து அவ்வழகை ரசித்தவாரு குதிரையில் மெதுவாக பயணித்தான் வந்தியத்தேவன்.

ஆஹா!! இது எவ்வளவு  பிரம்மாண்டமான ஏறி, எத்தனை நீளம், எத்தனை அகலம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்கள் அமைத்த ஏறி அனைத்தும் இதன் முன் சிறு குட்டையகவே காட்சியளிக்கும். மதுரை பராந்தகரின் மைந்தன் இளவரசர் இராஜாதித்ய சோழன் எப்படி அமைத்திருப்பார் என்பதை எண்ணி விகைப்புடன் இப்படி பட்ட சோழர் குல மன்னர்கள் நட்பு கிடைத்ததையும் எண்ணி கொண்டே பயணத்தை மேற்கொண்டார் வந்தியத்தேவன்.

அன்று பதினெட்டாம் பெருக்கு அல்லவா அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் முகம் மலர்ச்சியுடன் புத்தாடைகள் அனிந்துகொண்டு குடும்பங்களாக சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அழகிய காட்சி அவன் கண்களில் தென்பட்டது. அதில் சிலர் குடும்பங்களாக ஒன்றாக அமர்ந்து தனது உணவினை உண்டனர், சிலர் அங்கு பறந்து விரிந்து கிடக்கும் வீரநாராயண ஏரி பற்றிய இனிமையான பாடலை பாடினர், இன்னும் சிலர் சோழர் குல பெருமைகளையும் அக்குல மன்னர்களின் வீரத்தை பற்றியும் பாடல்களாக பாடிக்கொண்டு வந்தனர்.

உடம்பில் 96 காயங்களை ஆபரணங்கலாக கொண்டிருந்த விஜயாலய சோழன் வீரம் பற்றியும், அவன் மகன் ஆதித்த சோழன் காவிரி நதி உற்பத்தியாகும் இடம் முதல் கடல் சேரும் இடம் வரை 64 சிவாலயம் கட்டியதின் பெருமைகளையும் பாடினர். அப்பாடல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டே முன்னேறி வந்தவன், வழியில் ஒரு மூதாட்டியை பார்த்தான். மூதாட்டி அவனை பார்த்து உன்னை பார்த்தால் வெகுத் தொலைவில் இருந்து களைப்புடன் வருவதைப்போல் உள்ளது சற்று இளைப்பாறி உணவருந்திவிட்டு செல் மகனே என்று அழைத்தாள்.

அங்கு இருந்த வாலிப மங்கையர்கள் அனைவரும் இவனின் அழகைப் பார்த்து புன்னகைத்தவாறே நின்றனர். இதனை கவனித்த வந்தியத்தேவன் இங்கு உணவு உண்டால் பெண்கள் இவன் அழகைப் பார்த்து பரிகாசம் செய்வார்களோ என்று எண்ணி யோசித்தவாரு நின்றுகொண்டிருந்த அவன் கண்களில் வேறு ஒரு காட்சி தென்பட்டது. அது ஏரியில் வெள்ளை நிற புறாக்கள் கூட்டமாக பறந்து வருவது போல், வெள்ளை நிறத்து விரிப்புகளை விரித்தவாறு சில ஓடங்கள் வந்துகொண்டிருந்தன. முன்னே வந்த சில ஓடங்களில் இருந்து சில வீரர்கள் இறங்கிிி வேகமாக வந்து கரையின் ஓரத்தில் இருந்த மக்களை ஓரமாக போக சொல்லி விரட்டினர்.

அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியாதவாறு, யார் வருவது என்பதை உற்று பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான் வந்தியத்தேவன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முதியவரிடம் இங்கு என்ன நடக்கிறது என்பதை கேட்டான். முதியவர் நடுவில் வரும் படகை உற்றுப்பார் அதில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியை பார் என கூறினார். படகில் பனைமரக் கொடி ஏற்றப்பட்டிருந்தது அதை பார்த்த அவன் பழுவேட்டையர்கள் வருகிறார்களா என ஆர்வத்துடன் கேட்டான். ஆம் பெரிய பழுவேட்டையர் வருகிறார் என்று முதியவர் கூறினார்.

பழுவேட்டையர்கள், தெற்கே ஈழம் நாட்டிலிருந்து வடக்கே கலிங்கம் வரை அண்ணன் தம்பி, பெரிய பழுவேட்டையர் சிறிய பழுவேட்டையர் பற்றி தெரியாதவர் எவரும் இலர். உறையூருக்கு பக்கத்தில் வட காவேரியின் வடகரையில் உள்ள பழவூர் அவர்கள் நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்தே இவர்களது குளம் மிகவும் வீர புகழ்பெற்றது. பெரியவருக்கு இணையான வீரர் அக்காலத்தில் எவரும் இல்லை.  இப்பொழுது அவரது வயது ஐம்பதை தாண்டி விட்டதால் போர்களுக்கு செல்வதில்லை. சோழ குளத்துடன் மிக நெருக்கமான இடத்தில் இருந்த இவர்களுக்கு தனி கொடி அமைத்துக்கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

பெரிய பழுவேட்டையர் சோழநாட்டில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தார். சோழநாட்டில் உள்ள தானியங்கள் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சோழநாட்டில் வரிவசூலிக்கும் மிக முக்கியமான பொறுப்பு இவருடையது. சுந்தரசோழ மகாராஜாவுக்கு அடுத்து சோழநாட்டில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது இவரே. அப்படிப்பட்ட பெரிய பழுவேட்டையரய் பார்க்க வேண்டும் என ஆர்வம் வந்தியத்தேவனுக்கு வந்தது.
அப்பொழுது காஞ்சி நகரின் பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்ய கரிகாலன் ரகசியமாக தன்னிடம் கொடுத்த பொறுப்பு நினைவுக்கு வந்தது.

"வந்தியத்தேவா! நீ மிகப் பெரிய வீரன் என்பதை நான் நன்கு அறிவேன், அத்துடன் நீ மிகவும் புத்திக்கூர்மை உடையவன் என்பதையும் அறிவேன், எனவே உன்னிடம் இத்தகைய மாபெரும் பொறுப்பை ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் கொடுத்துள்ள 2 ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜர் சுந்தரசோழரிடமும் மற்றொன்றை என் தங்கை இளையபிராட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். தஞ்சையின் ராஜ்யத்தில் உள்ள பெரிய பெரிய நிர்வாகிகள் பற்றியும் ஏதேதோ கேள்விப்படுகிறேன். எனவே எவருக்கும் தெரியாமல், எவருக்கும் சந்தேகம் வராத வழியில் இந்த இரு ஓலைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும். போகும் வழியில் கவனம் சிதறாமல் எவருடனும் சண்டையிடாமல் நீ இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும. எவரேனும் வழியில் உன்னை வீண் சண்டைக்கு இழுத்தாலும் நீ போகக்கூடாது. 
முக்கியமாக, என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும், பழுவேட்டையரிடமும் நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு நீ யார் என்பதே தெரியக்கூடாது! நீ எதற்காக போகிறாய் என்பது முக்கியமாக தெரியவே கூடாது!".

சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய  வடதிசை சைன்யத்தின் மகாதண்ட நாயகர் ஆதித்ய கரிகாலன் இவ்வாறு கூறியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பன பற்றியும் சொல்லியிருந்தார். இதையெல்லாம் நினைவுக்கு வர பழுவேட்டையரை பார்க்க வேண்டும் என்ற அவளை விடுத்து அங்கிருந்து விரைந்தான். இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கி இளைப்பாறிவிட்டு நாளை காலைை புத்துணர்வுடன் பயணத்தை தொடங்கலாம் என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டான்.


நமது அடுத்த பதிவான பொன்னியின் செல்வன் அத்தியாயம்-2 ஆழ்வார்க்கடியான் நம்பி பற்றி படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:
https://mastermindtamil.blogspot.com/2020/04/ponniyin-selvan-tamil-story-1-2.html?m=1

Post a Comment

0 Comments