Ponniyin Selvan | பாகம் 1 | அத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை | Master Mind

பொன்னியின் செல்வன்
பாகம் 1 - புது வெள்ளம்

வணக்கம் நண்பர்களே நமது முந்தைய பதிவான பொன்னியின் செல்வன் பாகம் 1 அத்தியாயம் 3 விண்ணகரக் கோயில் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:

பொன்னியின் செல்வன் கதையை முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:


அத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை


விண்ணகரக் கோவிலிலிருந்து வேகமாக புறப்பட்ட வந்தியத்தேவன் அடுத்த ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைந்தான். அந்த காலத்து சோழநாட்டுப் பெருங்குடித் தலைவர்களில்  சம்புவரையர் மிகவும் முக்கியமானவர். அவருடைய அந்த மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசல் போல மிக பிரம்மாண்டமாக காட்சியளித்தது.


மாளிகையின் வாசலில் யானைகளும், குதிரைகளும், அந்த மிருகங்களை எல்லாம் பிடித்து கட்டுவோர், தீனி போடுவார், என கூட்டம் கோலாகலமாக இருந்தது. இதனையெல்லாம் பார்த்த அவனுக்கு இங்கே ஏதோ பெரிய நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை அறிந்துகொண்டான். அந்நிகழ்ச்சியை காண ஆர்வம் மிகுந்தவனாக மாளிகையின் வாசலில், உள்ளே செல்வதை குறித்து சிந்தித்தவாறே நின்றான். கோட்டையின் வாசலின் கதவுகள் திறந்திருந்தாலும் வாசலின் இருபுறமும் ஈட்டிகள் ஏந்திய காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். எப்படியும் காவலர்கள் நம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த அவன் வீரர்கள் அசந்த  நேரத்தில் வேகமாக உள்ளே நுழைவது தான் சரியாக இருக்கும் என வேகமாக உள்ளே நுழைய முற்பட்டான்.

வாசலை நெருங்கியதும் வீரர்கள் ஈட்டியை முன்னால் நீட்டி அவனை தடுத்தனர். இன்னும் 4 பேர் வந்து குதிரையின் தலைக் கயிற்றை பிடித்து நிறுத்தினர். அவர்கள் அனைவரும் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தனர். வந்தியத்தேவனின் முகத்தில் கோபம் கொதிக்க, "இதுதான் உங்கள் வழக்கமா? விருந்துக்கு வந்தவரை இப்படிதான் தடுத்து நிறுத்துவீர்களா?" என கோபத்துடன் கேட்டான்.

இவலவு துடுக்காக பேசுகிறாயே நீ யார் என காவலர்கள் கேட்டனர்.

"என் ஊரும் பேரும் கேட்கிறாயா? உனக்கு பாடி நாட்டுத் திருமங்கலம் என் ஊர். எனது குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக்கொண்டு பெருமை அடைந்தார்கள்! என் பெயர் வந்தியத்தேவன்! தெரிந்ததா?" என்றான்.

இதைக்கேட்ட வீரர்களில் ஒருவன் "இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரணையும் கூட அழைத்து வர வேண்டியதுதானே" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது! விருந்துக்கு வர வேண்டியவர்கள் அனைவரும் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை என்றான் காவலர் தலைவன்.

இங்கு நடக்கும் வாக்குவாதத்தை பார்த்து கோட்டைக்குள் இருந்த சிலர் வாசல் அருகில் வந்தனர்.

அவர்களில் ஒருவன் அடேய்! இங்கே பாருடா நாம் கோயிலில் பார்த்த அந்த குருதை என்றான்.

இன்னொருவன் அது குதிரை இல்லடா கழுதை என்றான்.

மற்றொருவன், "கழுதை மேல் உட்கார்ந்து இருப்பவனை பாரடா எவ்வளவு விரைப்பாக உட்கார்ந்து இருக்கிறான் என்று".

வந்தியத்தேவனுக்கு மிகுந்த கோபம், ஆனால் எதற்கு வீண் வம்பு திரும்பிப் போய் விடலாமா? அல்லது இளவரசர் கரிகாலனின் முத்திரை பதித்த சீட்டினை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது, பழவேட்டரையர் ஆட்கள் மேலும் பேசிய கேலிப் பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டான்.

"குதிரையை விடுங்கள் திரும்பிப் போகிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.

தடுத்த வீரர்கள் குதிரையின் முகக் கயிற்றை விட்டார்கள்.

குதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்கள் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உரைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்ராயுதம் சுழல்வது போல் தோன்றியது. குதிரை முன்னேறி கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியில் இருந்த வீரர்கள் திடீரென கீழே விழுந்தார்கள் வேல்கள் சடசடவென்று அடித்துக் கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்கள் மீது குதிரை பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத வீரர்கள் நாலாபுறமும் சிதறி சென்றார்கள்.


இதனை பார்த்த மற்ற கோட்டை வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர் பிடி பிடி என கூறிக்கொண்டு பலர் வந்தியத்தேவனை பிடிக்க விரைந்தனர். திடீரென அபாய முரசு கொட்டியது. வந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான், கையிலிருந்த வாளைச் சுற்றிக்கொண்டே, "கந்தமாறா கந்தமாறா! என்று கத்தினான்.

இதனைக் கேட்டதும் அங்கு சுற்றி இருந்த வீரர்கள் அனைவரும் திடுக்கிட்டு சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.

அச்சமயம் மாளிகையின் மேற்பரப்பிலிருந்து, "அங்கே என்ன கூச்சல்" என்று ஒரு இடி முழுக்க குரல் கேட்டது அந்தக் குரல் மகாராஜர் சம்புவரையர் குரல்.

"எஜமான்! யாரோ ஒருவன் காவலை மீறி நம் அரண்மனைக்குள் புகுந்து, நமது சின்ன எஜமான் பெயரை சொல்லி கூவுகிரான்! என்று கீழே இருந்த ஒருவன் சொன்னான்.

"கந்தமாறா! நீ போய் கீழே என்ன கலவரம் என்று பார்!" என அதே இடிமுழக்க குரலில் சம்புவரையர் கூறினார்.

"இங்கே என்ன ஆர்ப்பாட்டம்?" என்று ஒரு இளம் குரல் கேட்டது. அந்த இளம் குரலுக்கு சொந்தக்காரர் கந்தமாறன். ஈட்டி ஏந்திய வீரர்களுக்கு மத்தியில் வாலிப வீரன் ஒருவன் தன் சூழல் வாலை சுழற்றிக்கொண்டு வந்தான்.

கந்தமாறன், ஒரு கணம் வியப்புடன் வந்தியத்தேவனை பார்த்தான். "வள்ளவா, என் அருமை நண்பா! உண்மையாகவே நீதானா?" என்று உணர்ச்சி ததும்ப கூறிக்கொண்டே ஓடிச்சென்று வந்தியத்தேவனை கட்டி தழுவினான்.

"கந்தமாறா, நீ பலமுறை என்னை உனது அரண்மனைக்கு அழைத்தாயே என்று வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்பு கிடைத்தது" என்றான் வந்தியதேவன்.

சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்து, அட மூடர்களே! ஒருவரின் முகம் பார்த்து அவர் யார் என்பதை அறியத் தெரியாதா உங்களுக்கு, என்று கத்தினான் கந்தமாறன்.

கந்தமாறன் வந்தியத்தேவன் கையை பிடித்து வா நண்பா! என்று அழைத்துக்கொண்டு போனான். தன் நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனுடைய உள்ளம் துள்ளி குதித்தது.

போகிற போக்கில், வந்தியத்தேவன், "கந்தமாறா! இன்னைக்கு என்ன விசேஷம் இவ்வளவு காவல்கள், கட்டுப்பாடுகள், அலங்காரங்கள் அனைத்தும் தடபுடலாக இருக்கிறது என்றான்.

"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விரிவாக சொல்கிறேன். நீயும் நானும் பொன்னி ஆற்றங்கரையில்  தங்கியிருந்தபோது, 'பழவெட்டையரை பார்க்க வேண்டும், மழவெட்டையரை பார்க்க வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும், இவரைப் பார்க்க வேண்டும்' என்றெல்லாம் சொல்வாயே. அவர்கள் அனைவரும் இன்று இங்கே நீ பார்த்துவிடலாம்! என்றான் கந்தமாறன்.

பிறகு, விருந்தினர் மாளிகைக்கு வந்தியத்தேவனை அழைத்து சென்றான். முதலில் தன் தந்தை சம்புவரையர் முன் கொண்டு நிறுத்தி, " அப்பா! என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவன் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பேனே? அவன் இவன்தான்! என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினார். ஆனால் சம்புவரையர் அவ்வளவாக மகிழ்ச்சி அடைந்ததாக தோன்றவில்லை.

அப்படியா! இதை அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தது இவன் தானா? என்று கேட்டார்.

கலவரத்துக்கு காரணம் என் தோழன் அல்ல, வாசலில் காவலுக்கு நாம் வைத்துள்ள முட்டாள்கள்! என்றான் கந்தமாறன்.

இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருள் சூழ்ந்த இவ்வேளையில் ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை! என்றார் சம்புவரையர்.

கந்தமாறன் முகம் சுருங்கியது, இன்னும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அங்கிருந்து அழைத்து சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழவேட்டையரிடம் அழைத்துப் போய். "மாமா! இவன் என் ஆருயிர் தோழன் வந்தியத்தேவன், வானப் பேரரசர் குலத்தவன். நாங்கள் இருவரும் வடபொண்ணைக்கரை  பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் தங்களை ஒருமுறையாவது தன் வாழ்வில் பார்த்துவிடவேண்டும் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே இருப்பான். உங்களது மேனியில் 64 போர் காயங்கள் இருப்பது உண்மைதானா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். நான் நீயே எண்ணிப் பார்த்துக்கொள் என்று சொல்வேன், என்றான்.

பழவேட்டையர் சுருங்கிய முகத்துடன், " அப்படியா, தம்பி! நீயே வந்து எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயா? அவ்வளவு நம்பிக்கையின்மையா உனக்கு? வானர் குளத்தை காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்குமா? என்ற சந்தேகமா? என்றார்.

தோழர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். விளையாட்டாக சொன்னதை இவர் வினையாக எடுத்துக்கொண்டாரே  என்று திகைப்புடன் நின்றனர்.

வந்தியத்தேவன் மனதில் எரிச்சல் குமுறியது. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "ஐயா! பழவேட்டையர் குலத்தின் பெருமை குமரி முனையிலிருந்து இமயம் வரை பரவிக் கிடக்கிறது அதைப்பற்றி சந்தேகப்படுவதற்கு நான் யார்? என்று பணிவுடன் சொன்னான்.

"நல்ல மறுமொழி, கெட்டிக்காரப் பிள்ளை!" என்றார் பழவேட்டையர்.

இப்பொழுது இங்கிருந்து செல்வதே சரி என்பதை உணர்ந்த இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அப்பொழுது சம்புவரையர் தனது மகனை அழைத்து "உன் தோழனுக்கு சீக்கிரம் உணவளித்து எங்கேயாவது ஒரு தனியிடத்தில் படுக்க சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருப்பான்" என்றார்.  இதனைக்கேட்ட கந்தமாறன் கோபத்துடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

வந்தியத்தேவனை அந்தப்புரத்திற்கு அழைத்து சென்றான். அங்கே பல பெண்கள் இருந்தார்கள். அந்தப் பெண்களின் கூட்டத்தில் பழவேட்டையர் யானைக்கு பின்னால் பல்லக்கில் வந்த பெண் யாராக இருக்கும் என்று தேடியவாறு சென்றான், வந்தியத்தேவன்.

நமது அடுத்த பதிவில் பொன்னியின் செல்வன் பாகம் 1, அத்தியாயம் 5 - குரவைகூத்து பற்றி காண்போம் நன்றி.

Post a Comment

0 Comments