பொன்னியின் செல்வன்
பாகம் 1 - புது வெள்ளம்
வணக்கம் நண்பர்களே நமது முந்தைய பதிவான பொன்னியின் செல்வன் பாகம் 1 அத்தியாயம்-2 ஆழ்வார்க்கடியான் நம்பி படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:
பொன்னியின் செல்வன் தொடர்கதையை முதல் பாகத்தில் இருந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று படிக்கவும்:
அத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்
சில சமயங்களில் ஒரு சிறிய நிகழ்ச்சி நமது வாழ்வில் பெரிய சம்பவம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். அதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான் இப்பொழுது வந்தியத்தேவனின் வாழ்வில் நடைபெற இருக்கிறது. பழுவேட்டரையரின் பரிவாரணங்கள் செல்வதை கூட்டத்தில் ஒருவனாக நின்று வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது குதிரையை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தான் அல்லவா!. பழவேட்டையரின் படைவீரர்களிள் பின்னால் வந்த சிலரின் கண்களில் அக்குதிரை தென்பட ஒருவன் அக்குதிரையை நோக்கி சென்றான்.
அவன், அடேய்! இங்கே பாருங்கலடா குருதை ஒன்று நிற்கிறது என்றான்.
இன்னொரு படைவீரன், அடேய்! அது குருதை இல்லை குதிரை முதலில் அதை சரியாக உச்சரி என்று சிரித்தவாறு சொன்னான்.
அடேய்! இப்பொழுது இந்த இலக்கணம் ஆராய்ச்சி தேவையா முதலில் இது குதிரையா! இல்லை கழுதையா! என்பதை பார்ப்போம். என சிரித்துக்கொண்டே குதிரையிடம் சென்று அதன்மேல் ஏற முயற்சி செய்தான்.
தன் மேலே ஏற முயற்சி செய்பவன் தனது முதலாளி இல்லை என்பதை உணர்ந்த அக்குதிரையை அவனை மேலே ஏற விடாமல் முரண்டு பிடித்தது.
இதைப் பார்த்த மற்றொருவன், அடேய்! குதிரை மேலே ஏறுகிறேன் என்று சொல்லிவிட்டு என்னடா விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று சிரித்தவாறு சொன்னான்.
பொல்லாத குதிரை இதன்மேல் ராஜ பரம்பரையை சேர்ந்தவன் மட்டும்தான் ஏற வேண்டுமாம் நானெல்லாம் ஏறக் கூடாதாம் முரண்டு பிடிக்கிறது.
ஓ! அப்படியா! அப்படி என்றால் தஞ்சை முத்தரையன் தான் வந்து இதன்மீது ஏறவேண்டும் என்று கூறி அனைவரும் சிரித்தனர்.
முத்தரையார் குலம் நசிந்து போய் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இப்பொழுது சோழர்களின் புலிக் கொடியின் ஆட்சி நடைபெறுகிறது, எனவே அவ்வாறு கூறி நகைத்தனர்.
அதில் ஒருவன் அடேய்! முதலில் அந்த குதிரை நிஜ குதிரையா இல்லை பொய்க்கால் குதிரையை என்பதை பாரடா என்று சிரித்துக்கொண்டே கூறினான்.
நீ சொல்வது உண்மைதான், அதை முதலில் பார்ப்போம் என்று கூறிக்கொண்டே அக்குதிரையின் வாலை முறுக்கினான்.
வலியை தாங்கிக்கொள்ள முடியாத அந்த வாயில்லா குதிரை தாவிக்குதித்து ஓடத்தொடங்கியது. அங்கு உள்ள மக்கள் அனைவரையும் இடித்துக்கொண்டு அந்த குதிரை ஓடியது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனின் முகம் மாறத்தொடங்கியது. இவனின் முகம் மாற்றத்தை கண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி அந்தக் குதிரை இவனுடையது என்பதை அறிந்துகொண்டான்.
அடேய்! தம்பி, என் மீது உன் வீரத்தை காட்ட வந்தாயே இப்பொழுது அங்கே பார் அவர்கள் மீது முடிந்தால் உன் வீரத்தை காட்டு என்று நக்கலாக சிரித்தவாறே கூறினான்.
இதனைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு கோபம் தலை உச்சிவரை ஏறத் தொடங்கியது. ஆனால் சற்று பொறுமையுடன் சிந்தித்தான், அங்கு பழுவேட்டரையரின் படைவீரர்கள் நிறைய பேர் இருந்தனர் அவர்கள் அனைவருடன் சண்டை இடுவதில் எந்த ஒரு பொருளும் இல்லை என்பதை சுதாரித்துக்கொண்டு குதிரை ஓடிய பக்கம் சென்றான்.
அவனுக்கு தெரியும் அந்த குதிரை சிறிது தூரம் சென்று நின்றுவிடும் என்று. அதேபோல் அந்த குதிரை சிறிது தூரத்தில் தனியாக சோகத்துடன் நின்றுகொண்டிருந்தது. அதன் முகத்தை பார்க்கும் பொழுதே "என்னை ஏன் தனியாக விட்டு இப்படி ஒரு சங்கடமான நிலைக்கு என்னை உள்ளாக்கினாய்" என்று கேட்பதுபோல இருந்தது. அதனை புரிந்துகொண்ட வந்தியத்தேவன் குதிரையை தட்டிக்கடுத்து சமாதானப்படுத்தினான்.
சமாதானமான குதிரையை கூப்பிட்டுக் கொண்டு செல்ல தொடங்கினான். அப்பொழுது ஆழ்வார்க்கடியான் சாலையிலேயே இவன் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.
அதனைப் பார்த்த வன்னியத்தேவன் "இந்த சனியன் நம்மை விடமாட்டான் போலவே" என முனுங்கியவாரே முன்னேறி சென்றான்.
ஆழ்வார்க்கடியான், "தம்பி நீ எந்த பக்கம் போகிறாய்" என்று கேட்டான்
நானா! மேற்கு திசையில் சென்று, பிறகு தெற்கு திசையில் திரும்பி, சிறிது தூரம் கிழக்கு திசையில் சென்று பிறகு தென்மேற்கு திசையில் போவேன் என்றான், வந்தியத்தேவன்.
அது இல்லை தம்பி, இன்று இரவு நீ எங்கு தங்க இருக்கிறாய் என்று கேட்டேன்.
அதை எதற்கு நீ கேட்கிறாய்?
நீ, கடம்பூர் மாளிகைக்கு சென்றாள் என்னையும் கூட்டி செல்கிறாயா எனக்கு அங்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது என்றான் ஆழ்வார்க்கடியான்.
உனக்கென்ன மந்திர தந்திரம் தெரியுமா! நான் கடம்பூர் மாளிகை தான் செல்கிறேன் என்பதை எப்படி நீ அறிந்தாய்.
இதில் என்ன அதிசயம்! இன்று பல ஊர்களில் இருந்து மக்கள் அங்கேதான் செல்வார்கள், அது மட்டும் ஏன் இப்பொழுது சென்றாரே பழுவேட்டரையர் அவரும் அங்கேதான் செல்கிறார்.
உண்மையாவா! ஆச்சரியத்துடன் கேட்டான் வந்தியத்தேவன்.
உனக்கு தெரியாதா, அவரை அழைத்து செல்லும் யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் அனைத்தும் கடம்பூர் அரண்மனையை சேர்ந்தவைதான். பழுவேட்டரையர் எங்கு சென்றாலும் அவருக்கு இதுபோன்ற மரியாதைகள் கொடுக்க வேண்டும்.
வந்தியத்தேவன், மௌனமாக நின்றான்! பழுவேட்டரையர் போன்ற மகாவீரர் தங்கும் இடத்தில் தானும் தங்கும் வாய்ப்பு எளிதில் கிடைப்பதல்ல, அவருடைய நட்பும் நமக்கு அங்கு கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனால் அவரது படை வீரர்களோடு ஏற்பட்ட கசப்பான அனுபவம் எண்ணி யோசித்தவாறு நின்றான்.
தம்பி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என இரக்கமான குரலில் ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
உனக்கு நான் என்ன உதவி செய்ய முடியும், நானே இந்த பக்கத்துக்கு புதியவன், என்றான்.
உன்னால் முடிந்ததை தான் நான் கேட்பேன், என்னை அந்த கடம்பூர் மாளிகையினுள் அழைத்து செல்கிறாயா என கேட்டான்.
எதற்கு! அங்கேயும் ஏதாவது சிவபக்தர் வருகிறாரா, அவரிடமும் சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா என வாக்குவாதம் செய்ய போகிறாயா என வந்தியத்தேவன் கேட்டான்.
இல்லை! இல்லை! சண்டைக்கு இல்லை தம்பி! இன்று இரவு அங்கு மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு நடக்கிறது, இரவு களியாட்டம், சாமியாட்டம், குரவைக்கூத்து என எல்லாம் நடக்கும் அந்த குரவைக்கூத்து பார்க்க வேண்டும்.
அப்படியிருந்தாலும், நான் எவ்வாறு உன்னை அழைத்துச் செல்ல முடியும்?
என்னை, உன் பணியாள் என்று சொல்லி அழைத்துப் போ!
அதற்கு வேற ஆல் பார், நான் பொய் கூற மாட்டேன். கூறினாலும் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் நீ சொல்வதைப் பார்த்தால் என்னையே மாளிகையினுள் அனுமதிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.
அப்போ! நீ கடம்பூர் அழைப்பு பெற்று அங்கு போகவில்லையா?
ஒருவகையில் அழைப்பு இருக்கு, சம்புவரையர் மகன் இளவரசர் கந்தமாரவேள் என் நண்பர். அவரது மாளிகைப் பக்கம் வந்தால் என்னை கண்டிப்பாக மாளிகைக்கு வருமாறு அழைத்திருந்தார்.
இவ்வளவுதானா! அப்போ இன்னிக்கி இரவு உன் பாடு திண்டாட்டம்தானா?
இருவரும் பேசிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றனர்.
"இன்னும் ஏன் என்னை தொடர்ந்து வருகிறாய்" என வந்தியத்தேவன் கேட்டான்.
அதே கேள்வியை நானும் கேட்கலாம்! நீ ஏன் என்னை தொடர்ந்து வருகிறாய் என்று ஆழ்வார்க்கடியான் நம்பி கேட்டான்.
ஒ! மன்னித்துவிடு வழி தெரியாத காரணத்தினால் தான் நம்பி! சரி நீ எங்கே செல்கிறாய்.
நான் விண்ணகரக் கோயிலுக்கு செல்கிறேன்!
நானும் அந்த ஆலயத்திற்கு வந்து பெருமாளே தரிசிக்க விரும்புகிறேன்.
நீ பெருமாள் கோயிலுக்கு வரமாட்டாய் என நினைத்தேன். பார்க்க வேண்டிய கோயில், தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கு ஈஸ்வர முனிகள் என்ற பட்டர் பெருமாளுக்கு சௌகரியம் செய்து வருகிறார் அவர் ஒரு பெரிய மகான் என ஆழ்வார்க்கடியான் கூறினார்.
பேசிக்கொண்டே கோயிலை அடைந்தனர், கோயில் முழுவதும் கூட்டமாக உள்ளது, ஏதேனும் விசேஷம் உண்டா!
ஆம்! இன்று ஆண்டாள் திருநட்சத்திரம் அதனோடு ஆடிப் பெருக்கும் சேர்ந்துகொண்டது எனவே இன்று இங்கு கோலாகலமாக இருக்கும். தம்பி நீ ஆண்டாள் பாசுரம் ஏதாவது கேட்டிருக்கிறாயா.
இல்லையே!?
அப்படி என்றால் இனிமேலும் கேட்காதே!
ஏன்! அவ்வளவு மோசமாக வா இருக்கும்?
இல்லை தம்பி ஆண்டாள் பாசுரம் நீ கேட்க ஆரம்பித்தாள் பின்னர் என்னைப்போல நீயும் சன்னியாசியாக மாறி யாத்திரைக்கு கிளம்பி விடுவாய்.
ஓ அப்படியா! உனக்கு தெரியுமா? நீ பாடுவாயா?
சில தெரியும், வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்கள் சில தெரியும். பெருமாள் சன்னிதியில் அதனை பாடப் போகிறேன்.
பெருமாள் சந்நிதிக்கு வந்து நின்றவுடன், ஆழ்வார்க்கடியான் பாசுரங்களை பாட ஆரம்பித்தான். ஆண்டாள் பாசுரங்கள் சிலவற்றை பாடினான், அதன் பிறகு நம்மாழ்வார் தமிழ்ப் பாசுரங்கள் சிலவற்றையும் பாடத் தொடங்கினார்.
இவ்விதம், பாடத்தொடங்கியதும் ஆழ்வார்க்கடியான் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தொடங்கியது. வந்தியத்தேவன் அப்பாடலை உள்ளம் இலகி கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான். ஆழ்வார்க்கடியான் நம்பி பற்றி அவன் கொண்டிருந்த கருத்தும் மாறத்தொடங்கியது. இவன் விஷ்ணுவின் பரம பக்தன் போலாயிற்று என்று எண்ணிக் கொண்டான்.
வன்னியதேவன் மட்டுமல்லாது அக்கோயிலில் சூழ்ந்திருந்த பக்தர்களும், கோவில் அர்ச்சகர்கள், ஈஸ்வரப்பட்டரும் கண்ணில் நீர் மல்க அப்பாடலை கவனமாக கேட்டார்கள். அவர் அருகில் நின்றுகொண்டிருந்த அவரது இளைய புதல்வனும் அதனை கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆழ்வார்க்கடியான், 10 பாசுரங்களை பாடிவிட்டு
"கலி வயல் சென்னை குருகூர்ச் "
என்று கூறி பாசுரங்களை முடித்தான்.
கேட்டுக்கொண்டிருந்த பட்டரின் பாலகுமாரன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, ஐயா! குருகூர்ச் சடகோபர் எனும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாசுரங்கள் பாடி இருப்பதாய் கேள்விப்படுகிறேன். அவை அனைத்தும் உங்களுக்கு தெரியுமா என ஆழ்வார்க்கடியானை பார்த்து கேட்டார்.
இல்லை, ஐயா! அவ்வளவும் கற்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அவற்றில் இந்த 10 பாசுரங்கள் மட்டும்தான் எனக்கு தெரியும் என ஆழ்வார்க்கடியான் கூறினான்.
அப்படியா ஐயா! அப்படி என்றால் அந்த 10 பாசுரங்களையும் எனது புதல்வனுக்கு தாங்கள் கற்பிக்க முடியுமா என பட்டர் கேட்டார்.
இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் இந்த ஊர் மிகப்பெரும் பெருமைகளை அடைய உள்ளது. ஆழ்வார்க்கடியான் பாடல்களே கேட்ட அந்த பால்மணம் மாறாத பாலகன் வருங்காலத்தில் நாதமுனி எனும் நாமத்தோடு வைஷ்ணவ ஆச்சரியப் பரம்பரையில் முதலாவது ஆச்சாரியராக போகிறான். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் ஆயிரம் பாசுரங்களையும் சேகரித்து வரப்போகிறான். அப்பாசுரங்களை அவரது சீடர்களுக்கு கற்பிக்கவும் போகிறார். சரி நாம் வந்தியத்தேவன் கதைக்கு செல்வோம்.
இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியானை பார்த்து நம்பிகலே! நீங்கள் ஒரு பரமபக்தர் என்பதை அறியாமல் நான் செய்த அபசாரம் அனைத்தையும் மன்னிக்க வேண்டும் என்றான்.
மன்னித்து விடுகிறேன் தம்பி! இப்பொழுது எனக்கு ஒரு உதவி செய்வாயா என நம்பி வந்தியத்தேவனிடம் கேட்டார்.
அதுதான் என்னால் முடியாதென்று ஆயிற்று.
இது அது அல்ல, இது வேறு. நான் உன்னிடம் ஒரு சீட்டு தருகிறேன் அதை நீ கடம்பூர் மாளிகையில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு ஒருவரிடம் இந்த சீட்டை நீ கொடுப்பாயா.
யாரிடம் கொடுக்க வேண்டும்?
பழவேட்டையரின் யானைக்கு பின்னால் ஒரு பல்லக்கு சென்றது அதை பார்த்தாய் அல்லவா.
ஆம்! பார்த்தேன்?
அந்த பல்லக்கில் இருந்த பெண்ணிடம் தான் இந்த சீட்டினை நீ கொடுக்க வேண்டும்.
நிறுத்துங்கள்! என்னை யார் என்று நினைத்தீர்கள்! இதுபோன்ற வேலைக்கு நான் தான் கிடைத்தன! இந்த வார்த்தையை நீங்கள் இல்லாது வேறு யாராவது கூறியிருந்தால்.
"படபடப்பு வேண்டாம் தம்பி! உன்னால் முடியுமென்றால் செய் இல்லையெனில் சென்று வா! ஆனால் நீ எனக்கு இந்த உதவியை செய்தால் பின்னால் எப்பொழுதாவது உனக்கு என் உதவி பயன்பட்டிருக்கும். இல்லை முடியாது என்றாள்! சென்று வா!" என்றார் ஆழ்வார்க்கடியான்.
அதன் பிறகு வந்தியத்தேவன், அங்கு ஒரு கணம்க்கூட நிற்கவில்லை. உடனே தன் குதிரை மீது ஏரி கடம்பூர் மாளிகை நோக்கி சென்றான்.
நமது அடுத்த பதிவான பொன்னியின் செல்வன் பாகம் 1 அத்தியாயம் 4 கடம்பூர் மாளிகை பற்றி விரிவாக படிக்க:
0 Comments